பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சிலப்பதிகாரம்

கேட்டனை யாயின், இத் தோட்டார் குழலியொடு நீட்டித் திராது. நீ போக" என்றே கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி - 200

மாதரி சேர்தல் வளர்இள வனமுலை, வாங்கு அமைப் பணைத்தோள், முளைஇள வெண்பல், முதுக்குறை நங்கையொடு, சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக், கண்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப, மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு 205 செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ -

மிளையும், கிடங்கும், வளைவிற் பொறியும், கருவிரல் ஊகமும், கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும்; பாகடு குழிசியும், காய்பொண் உலையும், கல்லிடு கூடையும், 210

து.ாண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும், கவையும், கழுவும், புதையும், புழையும். ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும், சென்றுஎறி சிரலும், பன்றியும், பணையும், எழுவும்; சீப்பும், முழுவிறற் கணையமும், 215 கோலும், குந்தமும் வேலும், பிறவும், ஞாயிலும் சிறந்து - நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்து, தண் மனைபுக் கனளால் கோவலர் மடந்தை-கொள்கையின் புணர்ந்து-எண்.