பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைபெறு கட்டுரை 9

குன்றக் குரவையும் என்று இவை அனைத்துடன், காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து, வரம்தரு காதையொடு 85 இவ்ஆறு ஐந்தும் உரைஇடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள, மதுரைக் கூல வாணிகண் சாத்தண் கேட்டணன்; இது பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு - எண். 90 உரைபெறு கட்டுரை

பாண்டியன் அன்றுதொட்டுப் பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவ ைகொண்று, களவேள்வியால் விழவோடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது.

கொங்கு இளங்கோசர் அது கேட்டுக் கொங்கு இளங்கோசர், தங்கள் நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய, மழை தொழில் எண்றும் மாறா தாயிற்று.

இலங்கைக் கயவாகு

அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு எண்பாண் நங்கைக்கு நாள்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து ஆங்கு. அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள் என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஒர் பாடி விழாக்கோள் பண்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடு ஆயிற்று.

பெருங்கிள்ளி அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி, கோழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும்' என, நங்கைக்குப் பத்தினிக் கோட்டம் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே.