பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சிலப்பதிகாரம்

மந்திரச் சுற்றம் நீங்கி, மண்னவண் சிந்தரிச் நெடுங்கண் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் 1 40 வீழ்ந்தனன் கிடந்து, தாழ்ந்து பல ஏத்திக் - "கண்ணகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும், துண்ணிய மந்திரம் துணைஎனக் கொண்டு, வாயி லாளரை மயக்குதுயில் உறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் 145 கல்லெண் பேர் ஊர்க் காவலர்க் கரந்து, எண் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோண்' என - வினைவிளை காலம் ஆதலின், யாவதும் சினை அலர் வேம்பண் தேராண் ஆகி. ஊர்காப்பாளரைக் கூவி, "ஈங்கு எண் 15) தாழ்பூங் கோதை தண்காற் சிலம்பு கண்றிய கள்வன் கையது ஆகில் கொண்று. அச்சிலம்பு கொணர்க ஈங்கு " எனக் -

காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும், 'ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து எனத் 155 தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் தன்னைக் குறுகின னாகி'வலம்படு தானை மண்னவண் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவர்' எனச். செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் 160 பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட -

'இலக்கண முறைமையின் இருந்தோன். சங்கு. இவன் கொலைப்படு மகனலன்' என்று கூறும் அருந்திறல் மாக்களை, அகநகைத்து உரைத்துக் கருந்தொழிற் கொல்லண் காட்டினண் உரைப்போன்; 165