பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சிலப்பதிகாரம்

துயில்கண் விழித்தோன் தோளில் காணான் 195 உடைவாள் உருவ, உறைகை வாங்கி, எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றாண், மல்லிற் காண, மணித்துரண் காட்டிக் கல்வியின் பெயர்ந்த கள்வ்ண் - தன்னைக் கண்டோர் உளரேனிற் காட்டும்; ஈங்கிவர்க்கு 200 உண்டோ உலகத்து ஒப்போர்? என்று அக் கருந்தொழிற் கொல்லண் சொல்லத் -

இளையோன் கூறுதல் திருந்துவேல் தடக்கை இளையோண் கூறும்; "நிலனகழ் உளியண், நீலத் தானையண், கலண்நசை வேட்கையின் கடும்புலி போன்று, 205 மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து, ஊர்மடி கங்குல் ஒருவண் தோன்றக், கைவாள் உருவஎண் கைவாள் வாங்க, எவ்வாய் மருங்கினும் யானவன் கண்டிலேண்; அரிதிவர் செய்தி; அலைக்கும் வேந்தனும் - உரியது ஒன்று உரைமின், உறுபடையீர் !" எனக், 210 கொலைத் தொழில் கல்லாக் களிமகன் ஒருவன், கையில் வெள்வாள்.எறிநதனன் விலங்கூடு அறுத்தது; புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப, மண்ணக மடந்தை வாண்துயர் கூரக், 215 காவலன் செங்கோல் வளைஇய, வீழ்ந்தனன், கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து - எண்.

வெண்பா நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள். நல்அறமே; கண்ணகி தண் கேள்வன் காரணத்தால் - மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை விளைவாகி வந்த வினை.