பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்ச்சியர் குரவை 115

17. ஆய்ச்சியர் குரவை

தீய நிமித்தங்கள் "கயல் எழுதிய இமய நெற்றியின் அயல் எழுதிய புலியும் வில்லும் நாவலம் தண்பொழில் மண்னர் ஏவல் கேட்பப் பார் அரசு ஆண்ட மாலை வெண்குடைப் பாண்டியண் கோயிலில் காலை முரசம் கனைகுரல் இயம்பும்; ஆகலின் நெய்ம்முறை நமக்குஇன்று ஆம் என்று ஐயை தண் மகளைக் கூஉய்க், கடைகயிறும் மத்தும் கொண்டு இடை முதுமகள் வந்துதோன்றும் மண். |

குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின் மடக்கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு; 2 உறிநறு வெண்ணெய் உருகா; உருகும் மறிதெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு; 3 நாண்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்; மாண்மணி வீழும்; வருவது ஒன்று உண்டு; 4 கருப்பம்

குரவை ஆடுதும் எனல் குடத்துப்பால் உறையாமையும், குவி இமில் ஏற்றின் மடக்கணி நீர்சோர்தலும் உறியில் வெண்ணெய் உருகாமையும், மறிமுடங்கி ஆடாமையும். மாண்மணி நிலத்து அற்று வீழ்தலும், வருவதுஓர் துன்பம் உண்டு என, மகளை நோக்கி, மனம் மயங்காதே மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய