பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிலப்பதிகாரம்

1. புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) வான் சிறப்பு திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண்

குடைபோன்று.இவ் அம்கண் உலகு அளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல், பொண்கோட்டு 5 மேரு வலந்திரித லாண். மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல், மேல்நின்று தாண்சுரத்த லான்

பூம்புகார் பூம்புகார் போற்றுதும்!பூம்புகார் போற்றுதும்! 10 வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லாண். ஆங்கு, பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய 15 பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும், நடுக்குஇன்றி நிலைஇய எண்பது அல்லதை ஒடுக்கம் கூறார். உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே. அதனால், 20 நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம்நீள் புகழ்மண்னும் புகார்நகர் அது தன்னில்