பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பமாலை 121

18. துன்பமாலை

(கொச்சகக் கலி செய்தி அறிதல்

ஆங்கு, ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும். புகையும், புனைசாந்தும், கண்ணியும், நீடுநீர் வையை நெடுமால் அடிஏத்தத் து வித் துறைபடியப் போயினாள் மேவிக் 5 குரவை முடிவிலோர் ஊர் அரவங் கேட்டு, விரைவொடு வந்தாள் உளள் அவள்தான். சொல்லாடாள். சொல்லாடா நின்றாள் அந் நங்கைக்குச் சொல்லாடும், சொல்லாடுந் தான் 10 எல்லாவோ காதலற் காண்கிலேண் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்குமென் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்குமெண் நெஞ்சாயிண், ஏதிலார் சொன்னது எவன் வாழி யோ, தோழி 15 நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவுமென் நெஞ்சன்றே அண்பனைக் காணாது அலவுமெண் நெஞ்சாயின் மண்பதை சொன்னது எவண் வாழியோ தோழி தஞ்சமோ தோழி தலைவன் வரக் காணேன் 20 வஞ்சமோ உண்டு மயங்குமெண் நெஞ்சன்றே, வஞ்சமோ உண்டு மயங்குமெண் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்னது எவன் வாழி யோ, தோழி சொன்னது அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் 25 கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே, கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே, குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே