பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சிலப்பதிகாரம்

ஏங்கி மாழ்குதல் எனக் கேட்டுப் பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் 30 திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்.

துணிவு உரை

இண்புறு தங்கணவர் இடர்எரி அகம்மூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப் போல் 35 மண்பதை அலர்துாற்ற, மண்னவண் தவறிழைப்ப, அண்பனை இழந்தேன்யாண் அவலம்கொண் டழிவலோ? நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறம்முழ்கித் துயர்உறு மகளிரைப்போல் மறனொடு திரியும்கோல் மண்னவண் தவறிழைப்ப, 40 அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டழிவலோ? தம்முறு பெருங்கணவன் தழல்எரி அகம்மூழ்கக், - கைம்மைகூர் துறைமூழ்கும் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தெண்னவண் தவறிழைப்ப, இம்மையும் இசைஒரீஇ இணைந்து ஏங்கி அழிவலோ? 45 காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மடமகளிர் எல்லீருங் கேட்டிமின் ஆய மடமகளிர் எல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொருள் நீஅறிதி 50 காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ எண்கணவண்டிகள்வனோ அல்லண் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணும், இவ்வூர் என்றது ஒருகுரல்.