பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சிலப்பதிகாரம்

கடுங்கதிர் மீண்; இவை காண்பெண் காண், எல்லா!"

செங்கோலும், வெண்குடையும்,

செறிநிலத்து மறிந்து வீழ்தரும் நங்கோன்-தன் கொற்றவாயில்

மணிநடுங்க, நடுங்கும் உள்ளம்; இரவு வில்லிடும்; பகல் மீண்விழும்

இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்; 10 வருவதோர் துன்பம் உண்டு

மண்ணவற்கு யாம் உரைத்தும்' என -

ஆடி ஏந்தினர், கலண் ஏந்தினர்,

அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;

கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,

கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,

வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர்.

மாண் மதத்தின் சாந்து ஏந்தினர்,

கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,

கவரி ஏந்தினர். துபம் ஏந்தினர், 15

கூனும், குறளும், ஊமும் கூடிய

குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர,

நரை விரைஇய நறுங் கூந்தலர்,

உரை விரைஇய பலர் வாழ்த்திட ;

"ஈண்டு நீர் வையம் காக்கும்

பாண்டியன் பெருந்தேவி வாழ்க" என, ஆயமும் காவலும் சென்று

அடியிடு பரசி ஏத்தக் கோப்பெருந் தேவிசென்று, தன்

தீக்கனாத் திறம்உரைப்ப - 20