பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சிலப்பதிகாரம்

தீத்திறத்தார் பக்கமே சேர்க' என்று, காய்த்திய 55 பொற்றொடி ஏவப், புகைஅழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர்,

வெண்பா பொற்பு வழுதியும், தண் பூவையரும் மாளிகையும், விற்பொலியும் சேனையும், மா வேழமும் - கற்பு உண்ணத் தீத்தரு வெங்கூடல் தெய்வக் கடவுளரும் மாத்துவத் தால்மறைந்தார் மற்று.

22 அழற்படு காதை எரி பற்றுதல் ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது; காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன

அரைசர் பெருமான், அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத்து உயிர்ஆணி கொடுத்து, ஆங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் 5 புரைதீர் கற்பின் தேவி - தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது;

ஆசாண், பெருங்கணி, அறக்களத்து அந்தணர், காவிதி; மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும், குறுங்தொடி மகளிரும், ஓவியச் சுற்றத்து உரையவிந்து இருப்பக் - 10 காழோர், வாதுவர், கடுந்தேர் ஊருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயில் கொற்ற வாயில் தீமுகம் கண்டு, தாம் விடை கொள்ள - 15