பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழற்படு காதை 133

ஆதிப் பூதம் நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிர்ஒளித் தண்கதிர் மதியத் தண்ன மேனியண்; ஒண்கதிர் நித்திலம்பூணொடு புனைந்து, வெண்ணிறத் தாமரை, அறுகை, நந்தி, எண்று இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன்; 20 நுரைஎன விரிந்த நுண்பூங் கலிங்கம் புலராது உடுத்த உடையினன்; மலரா வட்டிகை இளம்பொரி, வண்ணிகைச் சந்தனம், கொட்டமொடு அரைத்துக் கொண்ட மார்பினன்; தேனும், பாலும், கட்டியும் பெட்பச் 25 சேர்வன பெறு உம் தீம்புகை மடையினன்; தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஒத்தின சாலையும், ஒருங்குடன் நின்று. பின்பகற் பொழுதில் பேணினண் ஊர்வோன்; நண்பகல் வரஅடி ஊன்றிய காலினண்; 30 விரிகுடை, தண்டே, குண்டிகை, காட்டம், பிரியாத் தருப்பை, பிடித்த கையினண்; நாவினும் மார்பினும் நவின்ற நூலினண்; முத்தி வாழ்க்கை முறைமையின் வழாஅ, வேத முதல்வன் கேள்விக் கருவியொடு, 35 ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் -

அரச பூதம் (வெண்றி வெங்கதிர் புரையும் மேனியன்; குன்றா மணிபுனை பூணினன், பூணொடு முடிமுதற் கலண்கள் பூண்டனன்; முடியொடு சண்பகம், கருவிளை, செங்கூ தாளம், 40 தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன், அங்குலி கையெறிந்து அஞ்சுமகனி விரித்த