பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சிலப்பதிகாரம்

குங்கும வருணங் கொண்ட மார்பினன் ; 45 பொங்கொளி யரத்த பூம்பட்டு உடையினன்;

முகிழ்த்தகைச்

சாலி அயினி பொற்கலத்து ஏந்தி, ஏலும் நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து; வெம்மையின் கொள்ளும் மடையினன்; செம்மையில்) 50 பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்; ஆழ்கடல் ஞாலம் ஆள்வோன் தன்னின், முரைசொடு வெண்குடை கவரி, நெடுங்கொடி

உரைசால் அங்குசம் வடிவேல், வடிகயிறு, எனவிவை பிடித்த கையினண் ஆகி, 55 எண்ணருஞ் சிறப்பின் மன்னரை ஒட்டி, மண்ணகங் கொண்டு, செங்கோல் ஒச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றம் கொண்டு, நடும்புகழ் வளர்த்து, நானிலம், புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அண்ன அரைச பூதத்து அருந்திறல் கடவுளும் 60

வாணிகப் பூதம் செந்நிறப் பசும்பொண் புரையும் மேனியண்; மண்ணிய சிறப்பின் மறவேண் மன்னவர் அரைசு முடிஒழிய அமைத்த பூணினன். வாணிக மரபின் நீணிலம் ஓம்பி, 65 நாஞ்சிலும் துலாமும் எந்திய கையினன்; (உரைசால் பொண்ணிறம் கொண்ட உடையினன்; வெட்சி, தாழை, கட்கமழ் ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் கூட முடித்த சென்னியண், நீடு ஒளிப் 70 பொண்னென விரிந்த நண்ணிறச் சாந்தம் தண்னொடு புனைந்த மின்னிற மார்பினன்; கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,