பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழற்படு காதை 135

நள்ளியம் பலவும நயந்துஉடன் அளைஇக் ' கொள்' எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு 75 நெல்லுடைக் களனே, புள்ளுடைக் கழனி, வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப், பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழந்து உண்ணு வோனே; அவனே நாஞ்சிலம் படையும், வாய்ந்துறை துலாமும் 80 சூழ்ஒளித் தாலும், யாழும் ஏந்தி, விளைந்துபதம் மிகுந்து, விருந்துபதம் தந்து, மலையவும் கடலவும் அரும்பலம் கொணர்ந்து, விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு i உழவுதொழில் உதவும் பழுதில் வாழ்க்கைக் 85 கிழவன் எண்போன் கிளர்ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவிண்ஒர் விளங்கொளிப்பூத வியன்பெரும் கடவுளும் -

வேளாண் பூதம் (கருவிளை புரையும் மேனியன்; அரியொடு வெள்ளி புனைந்த பூணினன்; தெள்ளொளிக் 90 காழகம் செறிந்த உடையினன்; காழகில் சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய கோட்டினும், கொடியினும், நீரினும், நிலத்தினும், காட்டிய பூவிற் கலந்த பித்தையன், கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச், 95 செம்மையின் வரூஉம் சிறப்புப் பொருந்தி) மண்ணுறு திருமணன் புரையும் மேனியன்;

ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்; ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்திப், பாடற்கு அமைந்த பலதுறை போகிக் 100 கலிகெழு கூடற் பலிபெறுபூதத் தலைவன் எண்போன் தானும் தோண்றி -