பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சிலப்பதிகாரம்

கோமுறை பிழைத்த நாளில் இந்நகர் தீமுறை உண்பதுஓர் திறன் உண்டு' என்பது ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின், 105 யாம்முறை போவது இயல்பு அண்றோ ! எனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நாற்பால் பூதமும் பாற்பாற் பெயரக் -

தெருக்களில் தீ கூல மறுகும் கொடித்தேர் வீதியும், பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் 110 (உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன் ) காவெரி ஊட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்குனரி மண்ட -

கறவையும் கன்றும் கனல்எரி சேரா, 115 அறவை ஆயர் அகண்தெரு அடைந்தன; மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும், விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன;

சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன், செப்புவாய் அவிழ்ந்த தேம்பொதி நறுவிரை 120 நறுமலர் அவிழ்ந்த நாறிரும் உச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள், குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்காழ் ஆரம், பரிந்தன பரந்த துாமெண் சேக்கைத் துணிப்பதம் பாராக் 125 காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்கத் -