பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழற்படு காதை

திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சி ஆர் அமளியில் துஞ்சுதுயில் எடுப்பி, வானரைக் கூந்தல் மகளிரொடு போத;

பெருமனைக் கிழத்தியர் கருத்து வருவிருந்து ஒம்பி மனையறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ்வு எய்தி, 'இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை, கொங்கைப்பூசல் கொடிதேர அன்று' எனப் பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்;

செயல் ஒழிதல் எண்-நான்கு இரட்டி இருங்கலை பயின்ற, பண் இயல் மடந்தையர் பயங்கெழு வீதித், தண்ணுமை முழவம், தாழ்தரு தீங்குழல், பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொரு நாடக மடந்தையர் ஆடரங்கு இழந்து, ஆங்கு. 'எந்நாட் டாள்கொல்? யார்மகள் கொல்லோ ? இந்நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து, தேரா மன்னனைக் சிலம்பின் வென்று. இவ் ஊர்தி ஊட்டிய ஒரு மகள்' என்ன -

அந்தி விழவும், ஆரண ஒதையும், செந்தி வேட்டலும், தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும், மாலை அயர்தலும்; வழங்குகுரல் முரசமும், மடிந்த மாநகர் -

137

130

135

140

145

150