பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சிலப்பதிகாரம்

மதுராபதி தோன்றுதல் காதலற் கெடுத்த நோயொடு; உளங்கனன்று, ஊதுஉலைக் குருகின் உயிர்ததனள், உயிர்த்து, மறுகிடை மறுகும், கவலையிற் கவலும், இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும், ஆரஞர். உற்ற வீரபத் தினிமுண் 155 கொந்தழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதி - எண்.

வெண்பா மாமகளும், நாமகளும், மாமயிடண் செற்றுகந்த கோமகளும், தாம்படைத்த கொற்றத்தாள்; - நாம முதிரா முலைகுறைத்தாள்; முன்னரே வந்தாள்; மதுரா பதிஎண்னும் மாது.

23 கட்டுரை காதை

மதுராபதி முறையீடு சடையும் பிறையும் தாழ்ந்த செண்ணிக், குவளை உண்கணி தவளவாள் முகத்தி; கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி, இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி, இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும், 5 வலமருங்கு பொண்ணிறம் புரையும் மேனியள்; இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள்; பனித்துறைக் 10 கொற்கைக் கொண்கண், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பண், பொதியிற் பொருப்பண், குலமுதற் கிழத்தி; ஆதலின் அலமந்து, ஒருமுலை குறைத்த திருமா பத்தினி,