பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

கட்டுரை காதை

அலமரு திருமுகத்து ஆயிழை நங்கை-தண் 15 முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோண்றிக் கேட்டிசின் வாழி, நங்கை! எண் குறை' என -

வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி. 'யாரை நீ, எண்பின் வருவோய்? என்னுடை ஆர் அஞர் எவ்வம் அறிதியோ' என - 20

'ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன். அணி-இழாஅய் ! மாபெருங் கூடல் மதுராபதி எண்பேன்; கட்டுரை யாட்டியேன், யாண்நின் கணவற்குப் பட்ட கவற்சியேன், பைந்தொடி கேட்டி பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய், எண் நெஞ்சம் 25 வருந்திப் புலம்புறுநோய் தோழி! நீ ஈதொன்று கேட்டி எங் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை, மாதராய் ஈது ஒன்றுகேள், உண் கணவற்குத் தீதுற வந்த வினை; காதில் 30 மறைநா ஒசை அல்லது; யாவதும் மணிநா ஒசை கேட்டலும் இலனே; அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது குடிபழி துாற்றும் கோலனும் அல்லன்,

பொற்கைப் பாண்டின் செயல் இன்னுங் கேட்டி; நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத்து ஒடும் ஆயினும், ஒழுக்கொடு புணர்ந்தவில் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கம் தாராது;