பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சிலப்பதிகாரம்

இதுவும் கேட்டி -

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி, புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள், "அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்' என மொழிந்து, 45

மன்றத்து இருத்திச் சென்றீர், அவ்வழி இன்றவ் வேலி காவா தோ?" எனச். செவிச் சூட்டு ஆணியின்; புகைஅழல் பொத்தி, நெஞ்சம் கூடுதலின், அஞ்சி, நடுக்குற்று. வச்சிரத் தடக்கை அமரர் கோமான் 50 உச்சிப் பொண்முடி ஒளிவளை உடைத்த கை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து

இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை;

திருத்திய தீர்ப்பு இன்னுங் கேட்டி! நண்வாய் ஆகுதல்' பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55 திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை, அறனறி செங்கோல், மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன், கறவைமுறை செய்தோன்; பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தண், தாங்கா விளையுள், நன்னாடு-அதனுள் 60 வலவைப் பார்ப்பாண், பராசரண் என்போண், குலவுவேற் சேரண் கொடைத்திறம் கேட்டு, " வண்தமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்திறல் நெடுவேற் சேரலண் காண்கு" எனக், காடும், நாடும், ஊரும் போகி, 65 நீடுநிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு,