பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரை காதை

ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர் முத்திச் செல்வத்து நான்முறை முற்றி ஐம் பெரு வேள்வியும் செய்தொழில் ஒம்பும் அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க, நாவலம் கொண்டு, நண்ணார் ஒட்டி, பார்ப்பன வாகை சூடி, ஏற்புற நண்கலம் கொண்டு தண்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னண் திருந்துதொழில் மறையவர் தங்கால் எண்பது ஊரே அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்துத் தண்டே, குண்டிகை, வெண்குடை, காட்டம், பண்டச் சிறுபொதி, பாதக் காப்பொடு களைந்தனண் இருப்போண்;

"காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி! கடற்கடம்பு எறிந்த காவலன் வாழி: விடர்ச்சிலை பொறித்த விறலோன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மண்னவண் வாழ்க!" எனக் குழலும், குடுமியும் மழலைச் செவ்வாய்த் தனர்நடை ஆயத்து, தமர்முதல் நீங்கி, விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தரக், "குண்டப்பார்ப்பீர்! எண்னோடு ஒதி, எண் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மிண்" எனச். சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முனனாத தளர்நா வாயினும், மறைவிளி வழாஅது. உளமலி உவகையோடு ஒப்ப ஒதத்; தக்கிணன் தண்னை மிக்கோண் வியந்து,

முத்தப் பூணுால், அத்தகு புனைகலம், கடகம், தோட்டொடு கையுறை ஈத்துத்,

141

70

75

80

85

90

95