பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

கட்டுரை காதை

செழியன் முறை பிறழ்தல் காரணம் "ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து, அட்டமி ஞான்று. வெள்ளரி வாரத்து, ஒள்ளெரி உண்ண, 135 உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்" எனும். உரையும் உண்டே, நிரைதொடி யோயே!.

கோவலன் முற்பிறப்புச் செய்தி

கடிபொழில் உடுத்த கலிங்க நல்நாட்டு, வடிவேல் தடக்கை வசுவும், குமரனும், தீம்புனல் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்புஎழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செலவத்து, நிரைதார் வேந்தர் வியாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முட் பகையுற, இருமுக் காவதத்து இடைநிலத்து யாங்கணும், f 45 செருவல் வென்றியின் செல்வோர் இண்மையின், அரும்பொருள் வேட்கையின் பெருங்கலன் சுமந்து, கரந்துறை மாக்களிற் காதலி தண்னொடு, சிங்கா வண்புகழச் சிங்க புரத்தின் ஓர் அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும் 150 சங்கமண் என்னும் வாணிகண் - தன்னை, முந்தைப் பிறப்பில், பைந்தொடி கணவன்வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன். பரதன் எண்னும் பெயரண், அக் கோவலன் விரதம் நீங்கிய வெறுப்பினண் ஆதலின்- 155 "ஒற்றண் இவன்" எனப் பற்றினண் கொண்டு, வெற்றிவேல் மண்னற்குக் காட்டிக் கொல்வழிக் கொலைக்களப் பட்ட சங்கமண் மனைவி, நிலைக்களங் காணாள். நீலி என்போள், "அரசர், முறையோ? பரதர், முறையோ? 160 ஊரீர், முறையோ சேரியீர், முறையோ?" என: மண்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநாள் இரட்டி எல்லை சென்றபின், "தொழுநாள் இது" எனத் தோன்ற வாழ்த்தி, மலைத்தலை ஏறி, ஒர் மால் விசும்பு ஏணியில் 165