பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

சிலப்பதிகாரம்

கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள், "எம்முறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம்இற் றாகுக" என்றே. விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள்நீ; "உம்மை வினைவந்து உருத்த காலைச் செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது; வாரொலி கூந்தல்! நின் மணமகன் தன்னை ஈரேழ் நாள், அகத்து எல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல்" என, மதுரைமாா தெய்வம் மாபத் திணிக்கு விதிமுறை சொல்லி, அழல்வீடு கொண்டபின்

கண்ணகி மறைவு 'கருத்துறு கணவற் கண்டபின் அல்லது. இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலண் எனக், கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்து, 'கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்; மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு' என:இரவும் பகலும் மயங்கினள் கையற்று, உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டு, ஆங்கு, அவல என்னாள், அவலித்து இழிதலின்; மிசைய என்னாள், மிசைவைத்து ஏறலின்;

170

175

180

i85

கடல்வயிறு கிழித்து, மலைநெஞ்சு பிளந்து, ஆங்கு,

அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குண்றம் அடிவைத்து ஏறிப்பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ் ஓர் தீத்தொழில் ஆட்டியேண் யாண் என்று ஏங்கி, எழுநாள் இரட்டி எல்லை சென்றபின், தொழுநாள் இது எனத் தோன்ற வாழ்த்திப், பீடுகெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி, வாடா மாமலர் மாரி பெய்து, ஆங்கு அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக் கோநகர் பிழைத்த கோவலன் - தண்னொடு

190

195