பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சிலப்பதிகாரம்

3. வஞ்சிக் காண்டம் 24. குன்றக்குரவை

கொச்சகக்கலி

குறவர் சந்திப்பு 'குருவி ஒப்பியும் கிளி கடிந்தும்

குண்றத்துச் சென்று வைகி; அருவி ஆடியும் சுனை குடைந்தும், அலவுற்று வருவேம்முண், மலை வேங்கை நறுநிழலின்,

வள்ளி போல்வீர்! மனம்நடுங்க, முலை இழந்து வந்து நின்றீர்;

யாவிரோ' என- முனியாதே, 'மண மதுரையோடு அரசு கேடுற

வல்வினை வந்து உருத்த காலைக் 5 கணவனை அங்கு இழந்து போந்த

கடுவினையேண் யான்' என்றாள்;

தெய்வமாக் கொள்ளுதல் என்றலும், இறைஞ்சி, அஞ்சி,

இணை வளைக்கை எதிர்கூப்பி, நின்ற எல்லையுள், வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து, குன்றவரும் கண்டு நிற்பக்,

கொழுநனொடு கொண்டு போயினார்; 'இவள் போலும்நங் குலக்கோர்

இருந் தெய்வம் இல்லை ஆதலின், (10)

சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே! தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே! நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை, நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்