பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 147

தெய்வங் கொள்ளுமின், சிறுகுடி யீரே! (15) தொண்டகம் தொடுமின; சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின; பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின் பரவலும் பரவுமின் விரவுமலர் துவுமின், ஒருமுலை இழந்த நங்கைக்குப், பெருமலை துஞ்சாது வளஞ்சுரக்க' எனவே, l

அருவிஆடுதல் ஆங்கொண்று காணாய், அணியிழாய் ஈங்கிதுகாண்: அஞ்சனப் பூழி, அரிதாரத் திண்னிடியல், சிந்துரச் சுண்ணம் செறியத்துாய்த் தேங்கமழ்ந்து, இந்திர வில்லிண் எழில்கொண்டு, இழுமென்று வந்தீங்கு இழியும் மலையருவி ஆடுதுமே, 2

ஆடுதுமே, தோழி! ஆடுதுமே தோழி! 'அஞ்சலோம்பு' என்று. நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே! 3

எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக் கல்திண்டி வந்த புதுப்புனல் கல்தீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்றாடின் நோம்தோழி நெஞ்சன்றே. 4

எண்னொன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப் பொன்னாடி வந்த புதுப்புனல்; பொண்ணாடி வந்து புதுப்புனல் மற்றையார் முன்னாடின் நோம், தோழி நெஞ்சன்றே ! 5