பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை

151

பாடு உற்றுப், பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்

தவு அல்குல்நம் பைம்புனத்து உள்ளாளே! பைத்தவு அல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே !

வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்தக் கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே; கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே !

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாடப் பெறுகதில் அம்ம, இவ்வூரும் ஒர்பெற்றி! பெற்றி உடையதே. பெற்றி உடையதே, பொற்றொடி மாதர் கணவண் மணம்காணப்

பெற்றி உடையது இவ்வூர்,

சேரனே வாழ்த்துதல் என்றும் யாம் கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக் கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர் - வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே !

23

24

25

26