பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சிலப்பதிகாரம்

25 காட்சிக் காதை

நிலைமண்டில ஆசிரியப்பா

1. மலை காண்குவம் எனல்

மாநீர் வேலிக் கடம்பெறிந்து இமயத்து, வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவர் தோண்றல், வாய்வாள் கோதை, விளங்கில வந்தி வெள்ளி மாடத்து, இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளித் 5 'துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்' எனப், பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி, வஞ்சி முற்றம் நீங்கிச்செல் வோன் -

பேரியாற்று அடைகரை வளர்மலர்ப்பூம்பொழில் வானவர் மகளிரொடு 10 விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும், புனல்யாற்றுப் பரப்பும், இலங்குநீர்த் துருத்தியும், இளமரக் காவும், அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த 15 பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று. கோங்கம், வேங்கை, துங்கிணர்க் கொண்றை, நாகம், திலகம், நறுங்காழ் ஆரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து, மதுகரம் Dமிறொடு வண்டினம் பாட 20

நெடியோன் மார்பில் ஆரம்போன்று பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை இடுமணல் எக்கர் இணைந்தொருங்கு இருப்பக் -