பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சிக் காதை

15,

கடவுள் எழுதஒர் கல்தா ராண்னனின். வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்; முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்; தென்திசை எண்றன் வஞ்சியொடு வடதிசை நிண்றெதிர் ஊன்றிய நீள்பெருங் காஞ்சியும்; நிலவுக்கதிர் அளைந்த நீள்பெருஞ் செண்ணி அலர்மந் தாரமொடு ஆங்குஅயல் மலர்ந்த

வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு' எனக் -

'குடைநிலை வஞ்சியும். கொற்ற வஞ்சியும், நெடுமா ராயம் நிஇைய வஞ்சியும் வெண்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும், பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்; குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், வட்கர் போகிய வாண்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்து, எண் வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும், எனப் -

வில்லவன் கோதை கூறியது 'பல்யாண்டு வாழக நின் கொற்றம், ஈங்கு என வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும் ;

நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக், கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப் புறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன; கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்

130

135

140

145

150

155