பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சிலப்பதிகாரம்

முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30 கதிரொருங்கு இருந்த காட்சி போல வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறிபிறழத் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் 35 திராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறும்ஒர் குறியாக் கட்டுரை

நலம் பாராட்டுதல்

"குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையின் 40 பெரியோன் தருக.திருநுத லாகென

அடையார் முனையகத்து அமர்மேம்படுநர்க்குப் படைவழங்குவதோர் பணிபுணர் டாகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் இருகரும் புருவ மாக ஈக்க 45 மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் தேவர் கோமாண் தெய்வக் காவல் படைநினக் களிக்கஅதன் இடைநினக்கு இடைஎன அறுமுக ஒருவனோர் பெறுமுறை யின்றியும் இருமுறை காணும் இயல்பினின் அன்றே 50 அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச் செங்கடைமழைக்கண் இரண்டா ஈத்தது; மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற்கு உடைந்து தண்காண் அடையவும்: அன்னம் நன்னுதல் மென்னடைக் கழிந்து 55 நண்ணிர் ப் பண்ணை நளிமலர்ச் செறியவும், அளிய தாமே சிறுபசுங் கிளியே