பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சிலப்பதிகாரம்

பங்களர், கங்கர், பல்வேற் கட்டியர், வடஆ ரியரொடு, வண்தமிழ் மயக்கத்து உண் கடமலை வேட்டம்என் கட்புலம் பிரியாது; கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம், 160 எம்கோ மகளை ஆட்டிய அந்நாள், - ஆரியமன்னர் ஈர்-ஐஞ் ஞாற்றுவர்க்கு ஒருநீ ஆகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது. கடுங்கண் கூற்றம்; இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய #65 இதுநீ கருதினை ஆயின், ஏற்பவர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை; இமயமால் வரைக்கு எம்கோண் செல்வது கடவுள் எழுதஓர் கற்கே ஆதலின் வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம், 170 தென்தமிழ் நல்நாட்டுச் செழுவில், கயல், புலி, மண்தலை ஏற்ற வரைக ஈங்கு' என

அழும்பில்வேள் அறிவித்தது 'நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; வம்புஅணி யானை வேந்தர் ஒற்றே | 75 தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ ! அறைபறை' என்றே அழும்பில்வேள் உரைப்ப -

நிறையரும் தானை வேந்தனும் நேர்ந்து, கூடா வஞ்சிக் கூட்டுஉண்டு சிறந்த வாடா வஞ்சி மாநகர் புக்கபின் - 180

'வாழ்க, எம்கோ, மன்னவர் பெருந்தகை ! ஊழிதொறு ஊழிஉலகம் காக்க' என, 'வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்து, ஒர்