பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்கோட் காதை 159

கல்கொண்டு பெயரும் எம் காவலன், ஆதலின், வடதிசை மருங்கின் மண்னர் எல்லாம் 185

இடுதிறை கொடுவந்து எதிரீர் ஆயின், கடற்கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும், விடர்ச்சிலை டொறித்த வியண்பெரு வார்த்தையும், கேட்டு வாழுமின்; கேளிர் ஆயின், தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்; 190 தாழ்கழல் மன்னன் தண்திரு மேனி, வாழ்க, சேனாமுகம்!" என வாழ்த்தி, இறைஇயல் யானை எருத்தத்து ஏற்றி, அறையறை எழுந்ததால், அணிநகர் மருங்கெண்.

26. கால்கோட் காதை

இணை மண்டில ஆசிரியப்பா அறையறை யெழுந்தபின் அரிமாண் ஏந்திய முறைமுதல் கட்டில் இறைமகன் ஏற ஆசாண் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழிஇ மன்னர் மன்னர் வாழ்கென்று ஏத்தி முன்னிய திசையின் முறைமொழி கேட்ப வியண்படு தானை விறலோர்க்கு எல்லாம் உயர்ந்து ஒங்கு வெண்குடை உரவோன் கூறும்; " இமையத் தாபதர் எமக்கீங்கு உணர்த்திய -96Ծ)ւDաՈI வாழ்க்கை அரைசர் வாய்மொழி 10 நம்பால் ஒழிகுவது ஆயின. ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழச்சியும் தரூஉம்; வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவுள் எழுதஒர் கல்கொண்டு அல்லது, வறிது மீளும் எண் வாய்வாள் ஆகில், 15