பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்கோட் காதை

தரும வினைஞரும், தந்திர வினைஞரும், 'மண்திணி ஞாலம் ஆள்வோன் வாழ்'கெனப், பிண்டம் உண்ணும் பெருங்களிற்று எருத்தின் மறமிகு வாளும், மாலைவெண் குடையும், புறநிலைக் கோட்டப்புரிசையிற் புகுத்திப் புரைதீர் வஞ்சிப் போந்தையின் தொடுப்போன் அரைசுவிளங்கு அவையம் முறையின் புகுதர

அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து -

ஞாலம் காவலர் நாள்திறை பயிரும் காலை முரசும் கடைமுகத்து எழுதலும், நிலவுக்கதிர் முடித்த நீளஇருஞ் சென்னி உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு; மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக், கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினண்

'குடக்கோக் குட்டுவண் கொற்றங்கொள் கென

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு, சிலர்நின்று ஏத்தத்

தெண்ணிர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி, அணிமணிப் புயத்துத் தாங்கினன் ஆகித் தகைமையின் செல்வழி -

161

45

50

55

60

65