பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் கோட் காதை 163

இந்திர திருவனைக் காண்குதும்' என்றே, அந்தரத்து இழிந்தாங்கு, அரசு விளங்கு அவையத்து. 95 மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற, மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனைச் 'செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் மலயத்து ஏகுதும், வாண்பேர் இமைய நிலையத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின், 100 அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்; பெருநில மன்ன! பேணல்நின் கடன்' என்று. ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர் -

'வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலத்து ஒதிய தகைசால் அணியினர்; 'இருள்படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர், வடம்சுமந்து ஓங்கிய வளரிள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கண் காரிகை யாரோடு, 'இருங்குயில் ஆல, இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் வந்தது; வாரார் காதலர்' என்னும் மேதகு சிறப்பின் மாதர்ப் பாணி வரியொடு தோன்றக் - 115

'கோல்வளை மாதே! கோலங் கொள்ளாய், காலங் காணாய், கடிதுஇடித்து உரறிக் காரோ வந்தது! காதலர் ஏறிய தேரோ வந்தது செய்வினை முடித்தனக் காஅர்க்குரவையொடு கருங்கயல் நெடுங்கண் 120 கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத் -