பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்கோட் காதை

167

தாரும் தாரும் தாமிடை மயங்கத் தோளும் தலையும் துணிந்துவே றாகிய சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆடப் பிணஞ்சுமந்து ஒழுகிய பிணம்படு குருதியில் கணங்கொள் பேய்மகள் கதுப்பு:இகுத்து ஆட;

அடுந்தேர்த் தானை ஆரிய அரசர் கடும்படை மாக்களைக் கொண்று களங்குவித்து, நெடுந்தேர்க் கொடுஞ்சியும், கடுங்களிற்று எருத்தமும்; விடும்பரிக் குதிரையின் வெரிதும் பாழ்பட்; "எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபகல் எல்லையில், உண்ணும்" என்பது ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய நூழிலாட்டிய சூழ்கழல் வேந்தன்: போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஒங்கிருஞ் சென்னி மேம்பட மலைய

கனகவிசயர் சிறைப்படல் வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும், ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு, செங்குட் டுவண் தண் சினவலைப் படுதலும்சடையினர், உடையினர், சாம்பற் பூச்சினர்; பீடிகைப் பீலிப் பெருநோண் பாளர். பாடு பாணியர், பல்லியத் தோளினர், ஆடு கூந்தர் ஆகி, எங்கனும் ஏந்துவாள் ஒழியத் தாம்துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தரக் -

205

210

220

225

230