பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சிலப்பதிகாரம்

கச்சை யானைக் காவலர் நடுங்கக் கோட்டுமாப்பூட்டி, வாள்கோல் ஆக, ஆள்அழிவாங்கி அதரி திரித்த வாளேர் உழவண் மறக்களம் வாழ்த்தித் தொடியுடை நெடுங்கை தூங்கத் துளக்கி; 235 முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக் கடல்வயிறு கலக்கிய ஞாட்பும், கடலகழ் இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேரூர் செருவும் பாடிப் பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப், 240 பிண்தேர்க் குரவைப் பேயாடு பறந்தலை

முடித்தலை அடுப்பிற் பிடர்த்தலைத் தாழித் தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊண்சோறு மறப்பேய் வாலுவண் வயினறிந்து ஊட்டச்

சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து 245 அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்க!' எனமறக்களம் முடித்த வாய்வாள் குட்டுவன், வடதிசை மருங்கின் மறைகாத்து ஒம்புநர் தடவுத்தி அவியாத் தண்பெரு வாழ்க்கை,

கால்துதாளரைப் போற்றிக் காமிங் னென, 250 வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த பல்வேல் தானைப் படைபல ஏவிப் பொற்கோட்டு இமயத்துப் பொருவறு பத்தினிக்

கல்கால் கொண்டனண் காவலன் ஆங்கெண்.