பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்படைக் காதை 169

27. நீர்ப்படைக் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) படை செய்தல்

வடபேர் இமயத்து வான்தரு சிறப்பிற் கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின், சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்-தங் கதிர்முடி ஏற்றிச்செறிகழல் வேந்தண் தென்தமிழ் ஆற்றல் 5 அறியாது மலைந்த ஆரிய மண்னரைச். செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டியென்று யாண்டும் மதியும், நாளும், கடிகையும், ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள: 10 வருபெருந் தானே மறக்கள மருங்கின், ஒருபகல் எல்லை, உயிர்த்தொகை உண்ட செங்குட் டுவண் தண்- சினவேல் தானையொடு கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 15 நூல்திறன் மாக்களிண் நீர்ப்படை செய்து

மண்பெருங் கோயிலும், மணிமணி டபங்களும், பொண்புனை அரங்கமும் புனையூம் பந்தரும், உரிமைப் பள்ளியும், விரிபூஞ் சோலையும், திருமலர்ப் பொய்கையும், வரிகாண் அரங்கமும், 20 பேரிசை மண்னர்க்கு ஏற்பவை பிறவும், ஆரிய மன்னர் அழகுற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை ஆங்கண், வெள்ளிடைப்பாடி வேந்தண் புக்கு -

அரசு விளக்கு இருக்கை நீள்நில மன்னர் நெஞ்சுபுகல் அழித்து, 25 வானவ மகளிரின் வதுவைசூட்டு அயர்ந்தோர்;