பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சிலப்பதிகாரம்

உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர்,

நாள்விலைக் கிளையுள் நல்லமர் அழுவத்து, வாள்வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்; 30 குழிக்கண் பேய்ம்மகள் குரவையின் தொடுத்து வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் கிளைகள்-தம்மொடு, கிளர் பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர்; மைந்தர், மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் 35

தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர் திண்தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப் புண்தோய் குருதியிற் பொலிந்த மைந்தர் மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக் கூற்றுக்கண் ணோட, அரிந்துகளங் கொண்டோர்; 40

நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம்பெற வந்த போர்வாள் மறவர்; 'வருக தாம்' என வாகைப் பொலந்தோடு பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்துத்; தோடார் போந்தை தும்பையொடு முடித்துப் 45 பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தண்; ஆடுகொள் மார்போடு, அரசுவிளங்கு இருக்கையின் -

மாடலமறையோன் வரவு மாடல மறையோன், வந்து தோன்றி 'வாழ்க, எங்கோ! மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் 50 முடித்தலை நெரித்தது; முதுநீர் ஞாலம் அடிப்படுத்து ஆண்டே அரசே, வாழ்க' எனப் -