பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்படைக் காதை 175

துலாபாரம் புகுதல்

அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே. பெருமகன் மறையோற் பேணி, ஆங்கு, அவற்கு 'ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டித். தோடார் போந்தை வேலோன் தன்நிறை 17: மாடல மறையோன் கொள்க' என்று அளித்து - ஆங்கு; ஆரிய மன்னர் ஐயிரு பதிண்மரைச் 'சீர்கெழு நன்னாட்டுச் செல்க' என்று ஏவித்

சேரன் செருக்கு தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த மாபெருந் தானை மண்ன குமரர்; 180 சுருளிடு தாடி, மருள்படு பூங்குழல், அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண்; விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்; சூடக வரிவளை, ஆடமைப் பனைத்தோள், வளரிள வனமுலை, தளர்இயல் மின்னிடை | 85 பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு; எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ் ஞாற்றுவர்; அரியியற் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனக விசயரை 190 இருபெரு வேந்தர்க்குக் காட்டிட் ஏவித்

நாடு திரும்புதல் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கனும் பரம்புநீர் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரை. பல்வண்டு யாழ்செய, வெயிலிளஞ் செல்வன விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்றக் குடதிசை ஆளும் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு