பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சிலப்பதிகாரம்

28. நடுகற் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) வரவேற்பு மகிழ்ச்சி

தண்மதி அண்ன தமனிய நெடுங்குடை மண்ணகம் நிழல்செய மறவாள் ஏந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் -தனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதுார் ஒண்தொடித் தடக்கையின் ஒணமலர்ப் பலிது உய், 5 வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர், 'உலக மண்னவண் வாழ்க!' என்று ஏத்திப், பலர்தொழ வந்த மலர் அவிழ் மாலை போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல் வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் 10 யானை வெண்கோடு அழுத்திய மார்பும், நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும், எய்கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும், மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக் 15 கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ "அகில்உண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து, முரிகருஞ் சிலைக்கீழ், மகரக் கொடியோண் மலர்க்கணை துரந்து, சிதர்அரி பரந்த செழுங்கடைத் துாதும் 20 மருந்தும் ஆயது. இம் மாலை என்றேத்தஇருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக், கருங்கயல் பிறழும் காமர் செவ்வியின் திருந்துஎயிறு அரும்பிய விருந்தின் மூரலும், மாந்தளிர் மேனி மடவோர் தம்பால் 25 ஏந்துபூண் மார்பின் இளையோர்க்கு அளித்துக்காசறைத் திலகக் கருங்கறை கிடந்த, மாசில்வாணன் முகத்து வண்டொடு சுருண்ட