பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகற் காதை 179

குழலும், கோதையும், கோலமும் காண்மார். நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30 வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழி இப், புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க், குரல்குரலாக வருமுறைப் பாலையின் துத்தங் குரலாத் தொண்முறை இயற்கையின், அந்தீங் குறிஞ்சி அகவண் மகளிரின் 35 மைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்து அயர்ந்துமுடிபுறம் உரிஞ்சும் கழற்காற் குட்டுவண் குடிபுறந் தருங்கால் திருமுகம் போல. உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் பலர் புகழ் மூதுார்க்குக் காட்டி நீங்க- 40 மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும். மண்ணிட்டு அரங்மும், மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும், விதானவே திகைகளும், 45 தண்கதிர் மதியம் தாண்கடி கொள்ளபடுதிரை சூழ்ந்த பயன்கெழு மாநிலத்து இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவின் கொடிமதில் மூதுார் நடுநின்று ஓங்கிய தமனிய மாளிகைப் புனைமணி மருங்கின் 50 வதுவை வேண்மாள் மங்கல மடந்தை மதியோர் வண்ணம் காணிய வருவழிஎல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்யாண்டு ஏத்தப், பரந்தன ஒருசார்; மணிகணை முழவும், வணர்கோட்டு யாழும், 55 பண்கணி பாடலும், பரந்தன ஒருசார். மாண்மதச் சாந்தும், வரிவெண் சாந்தும், கூனும் குறளும் கொண்டன ஒருசார்: வண்ணமும், சுண்ணமும், மலர்ப்பூம் பிணையலும்,