பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகற் காதை 183

மல்லண்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் செல்வம் நில்லாது என்பதை வெல்போர்த் தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை அல்லையோ, காவல் வேந்தே! இளமை நில்லாது என்பதை எடுத்துங்கு j 55 உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா, திருளுெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே! நரைமுதிர் யாக்கைநீயும் கண்டனை

விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; | 60 மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர். மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்களுர் நரகரைக் காணினும் காணும்; ஆடும் கூத்தர்போல், ஆருயிர் ஒருவழி #65 கூடிய கோலத்து, ஒருங்குநின்று. இயலாது; "செய்வினை வழித்தாய் உயிர்செலும்" என்பது, பொய்யில் காட்சியோர் பொருளுரை ஆதலின், எழுமுடி மார்ப! நீ ஏந்திய திகிரி வழிவழிச் சிறக்க, வயவாள் வேந்தே!- | 70

அரும்பொருட் பரிசிலேண் அல்லேண் யானும்; பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர் மலர்தலை உலகத்து உயிர்போகு பொதுநெறி புலவரை இறந்தோய்! போகுதல் பொறேஎண்;

வானவர் போற்றும் வழிநினக்கு அளிக்கும் 175 நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க்கு ஒங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்;