பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகற் காதை 185

'அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது. பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது' எனப் பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை, பார்தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின், 2}0 ஆர்புனை செண்ணி அரசற்கு அளித்து, செங்கோல் வளைஇய உயிர்வா ழாமை' தெண்புலம் காவல் மன்னவற்கு அளித்து; 'வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர்' என்பதை 215 வடதிசை மருங்கின் மன்னவர் அறியக், குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து,

மதுரை மூதூர் மாநகர் கேடுற, கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்து, நன்னாடு அணைந்து நளிர்சினை வேங்கைப் 220 பொண்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை, 'அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று. மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து, 225 இமையவர் உறையும் சிமையச் செல்வரைச் சிமையச் செண்ணித் தெய்வம் பரசிக், கைவினை முற்றிய தெய்வப் படிமத்து; 'வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து. முற்றிழை நண்கலம் முழுவதும் பூட்டிப்; 230 பூப்பலி செய்து, காப்புக்கடை நிறுத்தி, வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக், 'கடவுள் மங்கலம் செய்க' என ஏவினன்; வடதிசை வணக்கிய மண்னவர் ஏறு - என்