பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சிலப்பதிகாரம்

29 வாழ்த்துக் காதை தொகுப்புரை

குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்; கொங்கர் செங்களம் வேட்டுக், கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்; சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை

வடஆரிய மன்னர் ஆங்கு மடவரலை மாலைசூட்டி உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்றுமொழி நகையின ராய்த், தெண் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின்தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள், எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லை போலும்' என்ற வார்த்தை, அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து, ஆங்கண், உருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்தது போல், இமய மால்வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப

ஆரிய நாட்டு அரசுஒட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய பேர் இமயக் கல் சுமத்திப்,