பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துக் காதை 187

பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின்; கங்கைப் பேர்யாற்று இருந்து, நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி, வஞ்சிமா நகாப் புகுந்து, நிலஅரசர் நீள் முடியால் பலர்தொழு படிமம் காட்டித் தடமுலைப்பூச லாட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்; கண் ணகிதண் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி

அலம் வந்த மதி முகத்தில் சில செங்கயல் நீர் உமிழப் பொடி ஆடிய கரு முகில்தன் புறம் புதைப்ப, அறம் பழித்துக்; கோவலன் தன் வினை உருத்துக், குறுமகனால் கொலை யுண்ணக்; காவலன் தன் இடம் சென்ற கண்ணகிதன் கண்ணிர் கண்டு, மண்ணரசர் பெருந் தோன்றல் உள்நீர் அற்று, உயிர் இழந்தமை மாமறையோண் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்புவும், மனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்திக், காவற் பெண்டும், அடித் தோழியும், கடவுட் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயிழையைக் காண்டும்' என்று, மதுரைமா நகர் புகுந்து