பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துக் காதை 189

தேவந்தி கூறுதல் செய்தவம் இல்லாதேண் தீக்கனாக் கேட்டநாள், எய்த உணரா திருந்தேன், மற்றெண் செய்தேன? மொய்குழண் மங்கை முலைப்பூசல் கேட்டநாள். அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழி:

5

அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழி?

காவற்பெண்டு கழறியது கோவலண் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக், காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டு, ஏங்கிச், 'சாவதுதான் வாழ்வு' என்று. தானம் பலசெய்து, மாசாத்து வாண்துறவும் கேட்டாயோ, அன்னை? மாநாய்கண் தண்துறவும் கேட்டாயோ, அன்னை? 6

அடித்தோழி அறிவித்தது காதலன் தன்வீவும் காதலிநீ பட்டது உம், ஏதிலார்) தாங்கூறும் ஏச்சுரையும் கேட்டு ஏங்கிப் போதியின்கீழ் மாதவன்முண் புண்ணியதா னம்புரிந்த மாதவி தண்துறவும் கேட்டாயோ, தோழி? மணிமே கலை துறவும் கேட்டாயோ, தோழி? 7

தேவந்தி அரற்றியது ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்தோம்ப வல்லாதேன் பெற்றேண் மயல்' என்று உயிர்நீத்த, அவ்வை மகளிவள் தான், அம்மணம் பட்டிலா வையெயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழி!

மாமி மடகளைக் கண்டாயோ, தோழி? 8