பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சிலப்பதிகாரம்

கண்ணகி கூறுதல் எண்னே இஃதுஎண்னே! இஃது எண்னே கொல்? பொன்னஞ் சிலம்பின், புன்னமே கலை, வளைக்கை நல்வயிரப் பொன்தோட்டு, நாவலம் பொன்னிழைசேர், மின்னுக் கொடியொன்று மீவிசும்பில் தோன்றுமால்! 9

தெண்னவண் தீதிலன்; தேவர்கோன் தண்கோயில் நல்விருந்து ஆயினாண்; நானவன் தன்மகள்; வெல்வேலாண் குன்றில் விளையாட்டு யானகலேன்; எண்னோடும் தோழிeர், எல்லீரும், வம்மெல்லாம், 10

வஞ்சி மகளிர் பாடுதல் வஞ்சியீர், வஞ்சி இடையீர்! மறவேலான் பஞ்சடி ஆயத்தீர்! எல்லீரும், வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம் மெல்லாம்; தெண்னவண் தண்மகளைப் பாடுதும்; வம் மெல்லாம்; 11

செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர்' என்று. எங்கோ முறை.நா இயம்ப, இந் நாடு அடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம் மெல்லாம்; பாண்டியன் தண்மகளைப் பாடுதும் வம் மெல்லாம்; 12

'வானவன், எங்கோ,மகள் என்றாம்; வையையார் கோனவண்தான் பெற்றகொடி என்றாள் - வானவனை வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை வாழ்த்துவாள் தேவ மகள். 13

பாண்டியர் வாழ்க! தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின்நீர் கொல்ல, உயிர்கொடுத்த கோவேந்தண் வாழியரோ!