பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துக் காதை 191

வாழியரோ, வாழி வருபுனல்நீர் வையை குழும் மதுரையார் கோமான்றன் தொல்குலமே! 14

சேரண் வாழ்க மலையரையண் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீள் முடிமேல் ஏற்றினாள் வாழியரோ! வாழியரோ, வாழி, வருபுனல்நீர்த்தண் பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே! 15

சொழனைப் பாடுவோம் எல்லா! நாம்காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும், | 6 பூவிரி கூந்தல் புகார்.

அம்மானை வரி புகார் நகரைப் பாடல் வீங்குநீர் வேலி உலகுஆண்டு. விண்ணவர்கோன் ஒங்குஅரணம் காத்த வரவோன் யார். அம்மானை ? ஒங்குஅரணம் காத்த உரவோன் உயர்விசும்பில் துங்குளயில் மூன்றெறிந்த சோழன்காணி, அம்மானை,

சோழன் புகார்நகரம் பாடேலோர், அம்மானை, 17

புறவுநிறை புக்குப் பொண்ணுலகம் ஏத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவண் யார், அம்மானை? குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த கறவை முறைசெய்த காவலண்காணி, அம்மானை,

காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை! 18

கடவரைகள் ஓர் எட்டும் கண்ணிமையா காண, வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினண்யார்,

அம்மானை ?