பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துக் காதை 193

21. சேரனைப் புகழ்தல் (ஊசல் வரி) வடங்கொள் மணியூசல் மேல் இரீஇ ஐயை உடங்கு ஒருவர் கைநிமிர்த்தாங்கு ஒற்றைமேல் ஊக்கக், கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக் குடங்கை நெடுங் கணிபிறழ, ஆடாமோ ஊசல்; கொடுவிற் பொறிபாடி, ஆடாமோ ஊசல்! 24

ஓர் ஐவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன், பொறையன், மலையண் திறம்பாடிக் கார்செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல், கடம்புஎறிந்த வாபாடி, ஆடாமோ ஊசல்! 25

வண்சொல் யவனர் வளநாடு, வண்பெருங்கல், தெண்குமரி, ஆண்ட செருவிற். கயல்.புலியாண் மண்பதை காக்கும் கோமாண், மன்னன், திறம் பாடி, மின்செய் இடைநுடங்க, ஆடாமோ ஊசல்; விறல்விற் பொறிபாடி, ஆடாமோ ஊசல் ! 26 வள்ளைப் பாட்டு ( சோழர்) தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்; ஆழிக் கொடித்திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல் : பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்! 27

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாடமதுரை மகளிர் குறுவரே; வானவர்கோண் ஆரம் வயங்கியதோள் பஞ்சவன்தண் மீனக் கொடிபாடும் பாடலே பாடல்! வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்; 28