பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சிலப்பதிகாரம்

(சேரன்) சந்துஉரற் பெய்து, தகைசால் அணிமுத்தம் வஞ்சிமகளிர் குறுவரே, வான் கோட்டால்; கடந்தடுதார்ச் சேரண் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்; பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்: 29

ஆங்கு,

நீள்நில மன்னர், நெடுவில் பொறையன்நல் தாள்தொழஅர், வாழ்த்தல் தமக்களிது. சூழ் ஒளிய எங்கோ மடந்தையும் ஏத்தினாள். நீடுழி. செங்குட்டுவண் வாழ்க!' என்று. 30

30. வரந்தரு காதை நிலைமண்டில ஆசிரியப்பா 1. சேரண்

வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை கடவுட் கோலம் கட்புலம் புக்கபின், தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி, 'வாய்எடுத்து அரற்றிய மணிமேகலையார்; யாதவள் துறத்தற்கு ஏது? ஈங்கு, உரை' எனக்- 5

2. தேவந்தி உரைத்தது கோமகன் கொற்றம் குறைவின் றோங்கி நாடு பெருவளம் சுரக்கெண் றேத்தி, அணிமே கலையார் ஆயத்து ஓங்கிய மணிமே கலைதண் வாண்துறவு உரைக்கும் -

"மைஈர் ஒதி வகைபெறு வனப்பின் 10 ஐவகை வகுக்கும் பருவம் கொண்டது; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்