பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரந்தரு காதை 195

அவ்வியம் அறிந்தன; அது தாண்அறிந்திலள்; ஒத்துஒளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின; 15

புணர்முலை விழுந்தன; புல்லகம் அகன்றது; தளரிடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது; குறங்கிணை திரண்டன; கோலம் பொறா அ நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின; தலைக்கோல் ஆசாண் பின்னுள னாகக் 20

குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளாா; யாதுநின் கருத்து எண்செய் கோ" என, மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப

"வருக, எண் மடமகள், மணிமே கலை! என்று. உருவி லாளன் ஒருபெருஞ் சிலையொடு 25 விரைமலர் வாளி வெறுநிலத்து எறியக் கோதைத் தாமம் குழலொடு களைந்து, போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்.

ஆங்கு, அதுகேட்ட அரசனும் நகரமும் ஒங்கிய நண்மணி உறுகடல் வீழ்த்தோர், 30 தம்மில் துன்பம் தாம்நனி எய்தத்; செம்மொழி மாதவர், "சேயிழை நங்கை தண்துறவு எமக்குச் சாற்றினள்" என்றே அண்புறு நண்மொழி அருளொடும் கூறினர்; 'பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை, 35

திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினெண் என்றாங்கு அரசற் குரைத்தபின் குரல் தலைக் கூந்தல் குலைந்துபின் வீழத் துடித்தனள் புருவம், துவரிதழ்ச் செவ்வாய் மடித்து எயிறு அரும்பினள் வருமொழி மயங்கினள்: 40