பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சிலப்பதிகாரம்

திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள் கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள் பலரறி வாராத் தெருட்சியள்; மருட்சியள்; உலறிய நாவினள்; உயர்மொழி கூறித் தெய்வமுற்று எழுந்த தேவந் திகைதான் - 45

கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தண்முன் கடவுள் மங்கலம் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள், அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈண்ற இரட்டையம் பெண்கள் இருவரும், அண்றியும்; 50 ஆடக மாடத்து அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமியும், ஈங்குளள்;

பழம் பிறப்புகள் மங்கல மடந்தை கேட்டத்து - ஆங்கண் செங்கோட்டு உயர்வரைச் சேண்உயர் சிலம்பில் பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை நிரம்பிய 55 அணிகயம் பலவுள; ஆங்கவை இடையது, கடிப்பகை நுண்கலும், கவிரிதழ்க் குறுக்கலும், இடிக்கலப்பு அன்ன இழைந்துகு நீரும், உண்டுஓர் சுனை, அதனுள்புக்கு ஆடினர் பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின், 60 ஆங்கது கொணர்ந்து, ஆங்கு ஆயிழை கோட்டத்து ஓங்கிருக் கோட்டியிருந்தோய் உண்கைக் "குறிக்கோள் தகையது; கொள்" கெனத் தந்தேன; உறித்தாழ் கரகமும் உண் கையது அன்றே; கதிர் ஒழி காறும் கடவுள் தண்மை 65 முதிராது; அந்நீர் முத்திற மகளிரைத் தெளித்தனை ஆட்டின், இச் சிறுகுறு மகளிர் ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;