பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிலப்பதிகாரம்

தமிழ்ப் புலவன்

இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத், தமிழ் முழுது அறிந்த தன்மையண் ஆகி. வேத்துஇயல், பொதுஇயல் என்றுஇரு திறத்தின் நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து, 40 இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு, அசையா மரபின் அதுபட வைத்து, - மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து, நாத்தொலைவு இல்லா நண்னுாற் புலவனும்

தண்ணுமையாளன் ஆடல், பாடல், இசையே, தமிழே. 45 பண்ணே, பாணி, தூக்கே, முடமே, தேசிகம் என்றுஇவை ஆசின்று உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்து, ஆங்கு, வார நிலத்தை வாங்குபு வாங்கி . வாங்கிய வாரத்து யாழும் குழலும் 50 ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக் கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச் சித்திரக் கரணம் சிதைவிண்று செலுத்தும் அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் 55

குழலோனி

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் வர்த்தனை நாண்கும் மயலறப் பெய்து:ஆங்கு ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வினண் ஆகிப், 60 பணி அமை முழவின் கண் எறி அறிந்து தண்ணுமை முதல்வண்-தண்னொடு பொருந்தி, வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை